வெங்காய பக்கோடா

-

onion-pakoda

தேவையான பொருட்கள்

கடலை மா – 250 கிராம்

பச்சை அரிசி மா – 150 கிராம்

வெங்காயம் – 2

மிளகாய் – 2

வெள்ளைப் பூண்டு

எண்ணெய் , உப்பு, கறிவேப்பிலை, சோடா உப்பு

செய்முறை

வெங்காயங்களை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தனியாக மிளகாய் மற்றும் வெள்ளைப் பூண்டையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

கடலை மா மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக சலித்து அதனுடன் உப்பு, அரைத்த பொருட்கள , வெட்டிய வெங்காயம் மற்றும் சோடா உப்பை சேர்த்து கலக்கவும்.

கடாயில் எண்ணெயை வி்ட்டு லேசாக சூடானதும் 2 கரண்டி எடுத்து மாவில் விட்டு நீர் விடாமல் கலக்கவும்.

எண்ணெயை சூடானதும், கலந்து வைத்திருக்கும் மாவை கையால் பிசைந்து சிறுசிறு துண்டுகளாக இட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். இடனுடன் கறிவேப்பிலை பொரித்து கிளறி எடுக்கவும் .