ரவை லட்டு

-

delicious-rava-laddu-with-coconut-and-dryfruits

தேவையான பொருட்கள்

தினை ,ரவை – 100 g

நெய் – 100 g

சர்க்கரை – 200 g

பாதாம் பருப்பு அல்லது கஜு

ஏலக்காய் தூள்

தேன் – 100 g

செய்முறை

தினையை சுத்தம் செய்து வெறும் கடாயில் இட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ரவையையும் வறுக்கவும். பின் ஆற வைத்து ரவை, தினை, ஏலக்காய் சேர்த்து இலேசாக அரைக்கவும். பின் சர்க்கரையையும் சேர்த்து அரைக்கவும். பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். சிறிது நெய்விட்டு முந்திரிப் பருப்பையும் ஒன்றிரண்டாக உடைத்து வறுத்து சேர்க்கவும். பின் நெய்யை நன்றாக சூடு செய்து கலவையில் கொட்டி கலந்து, தேன் சேர்த்து கலந்து சிறு, சிறு உருண்டையாகப் பிடித்து பரிமாறவும்.