மட்டன் சமோசா

-

BeefSamosa

தேவையான பொருட்கள்

மட்டன் – 250 g

மைதா மாவு-300g

பெரிய வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 8

கிராம்பு-3

பட்டை

சோம்பு -1/2 tsp

மஞ்சள்தூள் -1/2 tsp

கறிவேப்பிலை

கொத்துமல்லி – 1 கட்டு

உப்பு

செய்முறை

மட்டன் கறியை மஞ்சள் தூள் இட்டு வேகவைக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி , கறிவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, சோம்பு, இட்டு பின் நறுக்கியவற்றை இட்டு வதக்கவும். அதன் பின் வேகவைத்த கறியைச் சேர்த்து அதனுடன் வதக்கவும். மைதா மாவுடன் தேவையான அளவு உப்பும், தண்ணீரும் சேர்த்து பூரிக்கு பிசைவது போன்று பிசைந்து கொள்ளவும்.

அதன் பின்பு கறிக்கலவையை சிறு உருண்டைகளாகச் செய்து பூரிபோல் தேய்த்து அதன் நடுவில் கலவையை வைத்து இரண்டாக மடித்து விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சமோசாக்களை போட்டு பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.

சுவையான மட்டன் சமோசா தயார் .