பீட்ரூட் மசாலா

-

beet-carrot-kachumber

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 2 அல்லது 2 1/2 கப் (துருவியது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tsp

கறிவேப்பிலை

மிளகாய் தூள் – 1 tsp

மல்லி தூள் – 1tsp

மஞ்சள் தூள் – 1/2 tsp

மாங்காய் தூள் – 1/2 tsp

சீரகம் – 1/2 tsp

கடுகு – 1/2tsp

உளுத்தம் பருப்பு – 1 tsp

எண்ணெய் – 1 tbsp

உப்பு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, துருவிய அல்லது துண்டுகளாக்கப்பட்ட பீட்ரூட்டை சேர்த்து, 4-5 நிமிடம், தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும்.

பின்பு அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பீட்ரூட் வேகும் வரை மூடி வைக்க வேண்டும். பீட்ரூட்ரானது வெந்ததும், அதனை இறக்கி சூடாக சோறுடன் பரிமாறுங்கள் .