சாம்பார் வடை

-

svada

தேவையான பொருள்கள்

வடை தயாரிக்க தேவையானவை
உளுத்தம் பருப்பு – 150 g
இஞ்சி – 1 tsp
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
எண்ணெய்

சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்

பருப்பு – 75 g
சின்ன வெங்காயம் – 100 g
மஞ்சள் பொடி – 1/2 tsp
சீரகம் – 1/2 tsp
தக்காளி -1
பூண்டு – 2 பல்
புளி

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் – 1tbsp
கடுகு – 1tsp
சின்ன வெங்காயம் – 25 g
கறிவேப்பிலை
நெய் – 1tsp
சாம்பார் பொடி – 1tbsp
புளி

அலங்கரிக்கப்பதற்கு

கொத்தமல்லி
பொடியாக அரிந்த வெங்காயம் – 2 tbsp

செய்முறை

முதலில் வடைக்கு அரைக்க உளுந்தை ஒரு மணி நேரம் ஐஸ் நீரில் ஊற வைத்து வடிக்கட்டியில் தண்ணீரை வடிகட்டி உப்பு, இட்லி சோடா சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். அதில் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சமிளகாய் மூன்றையும் பொடியாக அரிந்து கலந்து வைக்கவும்.

பருப்பை களைந்து கடாயில் இட்டு சின்ன வெங்காயம் முழு தோலை எடுத்து போடவும். தக்காளியை இரண்டாக அரிந்து சேர்க்கவும். மேலும் மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து அடுப்பில் ஏற்றவும், வெயிட் போட்டு தீயின் தனலை குறைத்து வைக்கவும். இரண்டு முன்று விசில் வந்ததும் இறக்கவும். கடாய் ஆவி அடங்கியதும். பருப்பை மசிக்கவும் .

1/2 டம்ளர் தண்ணீரில் சாம்பார் பொடியை கரைத்து, 1/4 டம்ளர் சுடு வெந்நீரில் புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

கரைத்து வைத்திருப்பவைகள் இரண்டையும் பருப்பில் சேர்த்து கொதிக்க விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியாக நெய்யை விடவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள வடைமாவை வடைகளாக தட்டி சுட்டெடுத்து எண்ணெயை வடித்து வைக்கவும்.

தாளித்து வைத்து இருக்கும் சின்ன வெங்காய சாம்பாரை வடையின் மேல் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும்.

பத்து நிமிடம் கழித்து நன்கு வடையில் சாம்பார் ஊறி இருக்கும். சுவையுடன் பரிமாறவும்.