கோழிக்கறி பக்கோடா

-

Chicken Pakoda

தேவையான பொருட்கள்

கோழிக்கறி – 1/4kg

இஞ்சி, பூண்டு விழுது – 1 tsp

மசாலா தூள் – 1 tsp

மிளகாய் தூள் – 1 tsp

மிளகு தூள் – 1tsp

மஞ்சள் தூள் – 1 tsp

வினிகர் – 1 tsp

உப்பு – 1 tsp

எண்ணெய் – 4 கப்

செய்முறை

கோழிக்கறியை தேவையான அளவிற்கு சதுரத் துண்டுகளாக வெட்டி, மஞ்சள் தூள் சேர்த்துக் கழுவி நீரை வடித்து வைக்கவும். அதில் மேற்கூறியவற்றில் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்து பொருள்களையும் கலந்து அதனை நன்றாக பிசிறி வைக்கவும்.

பின் குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியுள்ள கோழிக்கறியை எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கவும். சுவையான கோழிக்கறி பகோடா தயார்.