ஐயோ! இவ்வளவு சீக்கிரமாக நரைமுடியா ?

-

White-Hair

அதிகமான பேருக்கு அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கொஞ்சம் முடி நரைத்தால் மிகவும் கவலை அடைந்து விடுவார்கள் . அது இயல்பான ஒன்று தான் . அதற்கான டிப்ஸ் ,

தேங்காய் எண்ணெயில் நெல்லி கனியை இட்டு கொதிக்க வைக்கவும் . பின் அதனை உங்கள் நரைத்த முடிக்கு தடவவும் .நெல்லிக்காய் சூப்பை 15நாட்கள் அருந்தி வந்தால் உங்கள் நரைத்த முடியை குணப்படுத்தும் .

நறுக்கிய இஞ்சி துண்டுகளுடன் 1tsp தேன் கலந்து தினமும் உண்டு வந்தால் உங்கள் முடி நரைப்பது நிற்கும் .அதுமட்டுமல்லாமல் தேங்காய் எண்ணெயும் நரை முடி பிரச்சினைக்கு ஒரு சிறந்த வழியாகும் .

உங்கள் தலை சருமத்தில் தேங்காய் எண்ணெயுடன் தேசிக்காய் சாரை சேர்த்து மசாஜ் செய்து வந்தால் கருமையான பளபளப்பான முடியை பெறலாம் .

2tsp மருதாணி தூள் ,1tsp வெந்தய பேஸ்ட் ,2tsp துளசி இல்லை பேஸ்ட் ,3tsp காபி ,3tsp புதினா சாறு மற்றும் 1tsp தயிரை கலந்து கொள்ளவும் . பின் இந்த கலவையை உங்கள் நரைத்த முடிக்கு பூசி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும் .

பீர்க்கங்காயை தேங்காய் எண்ணெயில் இட்டு 3-4மணி நேரம் வரை நன்கு கொதிக்க வைக்கவும் . பின் அந்த எண்ணெய்யை நரை முடியில் பூசி வர அது மறைந்து கருமையாக இருக்கும் .