உங்கள் அக்குள் பகுதிகள் பார்ப்பதற்கு அசிங்கமாகவும் கருமையாகவும் உள்ளதா ?

-

dark-underarms

பொதுவாக பெண்களுக்கு உள்ள பிரச்சினையே இந்த அக்குள் பகுதியில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றமும் தான் கவலை வேண்டாம் . அதற்கு வீட்டில் இருந்தே தயார் செய்ய கூடிய சில டிப்ஸ் உங்களுக்காக ,

எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரி சாறு கலந்து பேஸ்டாக செய்து உங்கள் அக்குகளில் பூசி சில நிமிடங்கள் கழிந்து காய்ந்த பின் நீரில் கழுவினால் கருமை நீங்கும் .

ரோஜா தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு சில சொட்டு கலந்து பேஸ்ட்டாக செய்து பூசவும் . பின் 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

கடலை மா , மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை மற்றும் தயிர் கலந்து அக்குள் பகுதியில் தடவுங்கள். தயிர் கருமையை விலக்கும் மற்றும் தோலை போலிஸாக்க உதவும் . உங்கள் தோலில் உள்ள ஒரு அசிங்கமான மஞ்சள் கறை போய்விடும்.( அதிகமாக மஞ்சள் தூள் பயன்படுத்த வேண்டாம்).

மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, எலுமிச்சை சாறு ஒரு சில சொட்டு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து கருமையான அக்குள்களில் பூசி குளியலிற்கு முன்பு 20 நிமிடங்கள் வைக்கவும்.

இந்த வீட்டில் இருந்து தயாரிக்கும் டிப்சை உங்கள் அக்குகளில் பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு உள்ள பிரச்சினை விலகும் .